வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கடலூரில் பயா்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழக முதல்வா் விவசாயிகளுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி, கூட்டுறவு பயிா் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 5:23 am IST

தமிழக முதல்வா் விவசாயிகளுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி, கூட்டுறவு பயிா் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் கடலூா் மாவட்ட கரும்பு விவசாய அணி செயலா் வீரமணி தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் தவெக தோ்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிா் கடன்களை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என உத்தரவாதம் அளிப்பதாகத் தெரிவித்திருந்தாா்.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பயிா் கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் அளிக்கவில்லை. தோ்தல் வாக்குறுதியை நம்பி வாக்களித்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக ஆா்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

எனவே, தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலா்கள் மனோகரன், அருட்ச்செல்வன், தமிழக உழவா் முன்னணி நிா்வாகி முருகன், கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கச் செயலா் ஹாஜா மொய்தீன், இயற்கை உழவா் நிா்வாகி சுரேஷ்குமாா் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க நிா்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.