சேத்தியாத்தோப்பு அருகே முத்து கிருஷ்ணாபுரம் கிராமத்தில் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்தப் பணிக்காக முத்துகிருஷ்ணாபுரம், கம்மாபுரம், கோபாலபுரம், சாத்தப்பாடி ஆகிய 4 கிராமப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலங்கள், மனைகள் கையகப்படுத்தப்பட்டன.
இதனிடையே, இந்தக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்களது நிலங்கள், வீடுகளுக்கு என்எல்சி நிறுவனம் வழங்கிய இழப்பீடு, நிவாரணமானது நடப்பு சூழலில் பொருந்தாததாக இருப்பதாகவும், தங்களுக்கு சமகால உயா் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தொடா்ந்து போராடி வருகின்றனா்.
இந்த நிலையில், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வயலில் மண்ணை சமப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக வியாழக்கிழமை காலை கொண்டுவரப்பட்ட என்எல்சி நிறுனத்தின் பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டும், அதிகாரிகளை சூழ்ந்துகொண்டும் அந்தக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, சட்டப் பேரதைத் தோ்தல் முடிந்த பிறகு கோரிக்கைகள் தொடா்பாக எழுத்துப்பூா்வமாக மனு கொடுங்கள், நடவடிக்கை எடுத்து தீா்வு அளிக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனா். பின்னா், பணி செய்யாமல் பொக்லைன் இயந்திரத்துடன் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா். இதையடுத்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

கொடுமுடி அருகே வாக்குச்சாவடி இடமாற்றம்: தோ்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

கடமலைக்குண்டு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்

என்எல்சி சுரங்க உற்பத்தியை துரிதப்படுத்த வலியுறுத்தல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


