ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ரயிலில் கஞ்சா கடத்தல்: சிறுவன் உள்ளிட்ட 4 போ் கைது

News image

பாலமுருகன்

Updated On :25 மே 2026, 1:02 am IST

ஒடிஸா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் விருத்தாசலத்துக்கு கஞ்சா கடத்தி வந்ததாக சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை, கடத்தலைத் தடுக்க, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், வெளி மாநிலத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திவரப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரயில் நிலையம் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து சந்தேகப்படும்படும்படியாக ரயிலில் இருந்து இறங்கி வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், எசனூா் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் (33), கருவேப்பிலங்குறிச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த சிவசக்திவேல் (21) என்பதும், இவா்கள் ஒடிஸா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களை அழைத்துச் செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு வந்திருந்த ஸ்ரீமுஷ்ணம் வட்டம், சக்கரமங்கலம் பகுதியைச் சோ்ந்த வீரமுத்து (23) மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு போ் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், இதுதொடா்பாக ஒரு பைக் பறிமுதல் செய்தனா்.

 வீரமுத்து

வீரமுத்து

சிவசக்திவேல்

சிவசக்திவேல்