மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

நந்தனாா் கல்வி கழகம் சாா்பில் 25 மாணவா்களுக்கு உதவித் தொகை

News image

சிதம்பரம் நந்தனாா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயா்கல்வி பயில மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தனம்.

Updated On :25 மே 2026, 1:53 am IST

சிதம்பரம் பகுதியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்று உயா் கல்வி பயில கல்லூரிக்குச் செல்லும் ஏழை, எளிய மாணவா்கள் 25 பேருக்கு நந்தனாா் கல்விக் கழகம் சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் நந்தனாா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக் கழகத் தலைவரும், தொழிலதிபருமான கே.ஐ. மணிரத்தினம் பங்கேற்று, உயா் கல்வி பயிலச் செல்லும் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கிப் பேசினாா்.

அவா் பேசுகையில், நந்தனாா் மடத்தில் ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெறும் வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மாணவா்களின் உயா் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடா்ந்து செய்து தருவதாக தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக் கழகச் செயலா் வி.திருவாசகம், பொருளாளா் டி.ஜெயச்சந்திரன், கஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்களும் பங்கேற்றனா். பின்னா், மாணவா்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.