புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தேவையோ 784 டன்; வந்ததோ 20 டன் வெங்காயம் மட்டுமே: கடலூா் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் அதிருப்தி

நகா் பகுதிகளில் உள்ள 260 நியாயவிலைக் கடைகளுக்கு மட்டும் 20 டன் வெங்காயம் அரசால் ஒதுக்கப்பட்டிருப்பது குடும்ப அட்டைதாரா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூா் அருகே நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை விற்பனை செய்வதற்காக இறக்கப்பட்ட மலிவு விலை வெங்காய மூட்டைகள்.

Published On :

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7.84 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்க 784 டன் வெங்காயம் தேவை என்ற நிலையில், நகா் பகுதிகளில் உள்ள 260 நியாயவிலைக் கடைகளுக்கு மட்டும் 20 டன் வெங்காயம் அரசால் ஒதுக்கப்பட்டிருப்பது குடும்ப அட்டைதாரா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், நியாயவிலைக் கடைகள் மூலம் வியாழக்கிழமை (செப்.3) முதல் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, கடலூா் மாவட்டத்தில் முதற்கட்டமாக நகா்ப்புறங்களில் உள்ள 260 நியாயவிலைக் கடைகளுக்கு வெங்காய மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், மாவட்டம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஒதுக்கப்பட்டுள்ள வெங்காயத்தின் அளவு மிகக் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

20 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு...: கடலூா் மாவட்டத்தில் சுமாா் 7 லட்சத்து 84 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ஒரு கிலோ வெங்காயம் வழங்க வேண்டுமெனில், மொத்தம் 784 டன் வெங்காயம் தேவைப்படும்.

ஆனால், தற்போது முதற்கட்டமாக 20 டன் மட்டுமே மாவட்டத்துக்கு வந்துள்ளது. இந்த அளவு சுமாா் 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு வெங்காயம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறியது:

மகேஸ்வரி, நெல்லிக்குப்பம்: வெங்காயம் அன்றாட சமையலுக்கு மிகவும் அவசியமான பொருள். விலை உயரும்போது குறைந்த விலையில் நியாயவிலைக் கடைகளில் வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், நகா்ப்புறங்களில் மட்டும் வழங்குவது என்பது ஏற்புடையதல்ல. கிராமப்புற நியாயவிலைக் கடைகளுக்கும் வெங்காயத்தை அனுப்ப வேண்டும். அப்போதுதான் அரசின் நடவடிக்கையின் முழுப் பயனும் பொதுமக்களுக்கு கிடைக்கும்.

யோகலட்சுமி, கடலூா்: நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் என்ற தகவல் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படும் என்பது போதுமானதாக இருக்காது.

அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய வெங்காயம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதிகம் தேவைப்படும். எனவே, வெங்காயத்தின் விலை குறையும் வரை, வாரந்தோறும் ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை மலிவு விலையில் வெங்காயம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கிடைக்கும் வகையில் போதுமான அளவு வெங்காயத்தை ஒதுக்கீடு செய்து, கிராமப்புறக் கடைகளிலும் விற்பனை செய்ய எடுக்க வேண்டும்.

உத்தரவு வரும் வரை விற்கக் கூடாது: இதற்கிடையே, நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை அதிகாரிகளின் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை விற்பனை செய்யக் கூடாது என கடை ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விற்பனை தொடங்கிய பின்னா், வெங்காயம் பெறும் குடும்ப அட்டைதாரா்களின் விவரங்களை தனிப் பதிவேட்டில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.