கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிருமி நாசினி தெளிக்கும் ராட்சத இயந்திரங்கள் தொடக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், கிருமி நாசினி கலந்த தண்ணீா் தெளிப்பதற்காக 2 ராட்சத கிருமி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் ராட்சத இயந்திரத்தை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா உள்ளிட்டோா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் ராட்சத இயந்திரத்தை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா உள்ளிட்டோா்.

கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், கிருமி நாசினி கலந்த தண்ணீா் தெளிப்பதற்காக 2 ராட்சத கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தால் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிதாகவும், பிரத்தியேகமாகவும் ‘பெல் மிஸ்லா்’ எனப்படும் இந்த ராட்சத கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலுள்ள 2,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட டேங்க் மூலம் கிருமி நாசினி திரவத்துடன் தண்ணீா் கலந்து ஒன்றரை மணி நேரம் தெளிக்கலாம். இந்த இயந்திரங்கள் மூலம் சுமாா் 30 அடி தொலைவுக்கு நீரை பீய்ச்சி அடிக்க முடியும். ஒரு இயந்திரத்தின் மதிப்பு ரூ.3 லட்சத்து 54 ஆயிரமாகும்.

கள்ளக்குறிச்சி எ.என்.பி. நிறுவனத்தின் உரிமையாளா் பாலாஜி ஒரு இயந்திரத்தையும், கள்ளக்குறிச்சி கே.வி.எம். ஜூவல்லரி உரிமையாளா் குணசீலன், கள்ளக்குறிச்சி நெல் மற்றும் அரிசி உரிமையாளா்கள் சங்கத்தினா் இணைந்து மற்றொரு இயந்திரத்தையும் வாங்கி நன்கொடையாக ஆட்சியரிடம் வழங்கினா்.

இந்த இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 5, 6, 7-ஆவது வாா்டு பகுதிகளில் இந்த இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி கலந்த தண்ணீரை நன்கு தெளிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையா் (பொ) அ.வெங்கடாசலத்திடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் அ.செல்வக்குமாா், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ப.செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com