கள்ளக்குறிச்சியில் 1,001 பேருக்கு எம்.பி. நிவாரண உதவி
By DIN | Published On : 17th April 2020 07:43 AM | Last Updated : 17th April 2020 07:43 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள், சலவைத் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்கள் உள்பட 1,001 பேருக்கு பொன்.கெளதமசிகாமணி எம்.பி. தனது சொந்தச் செலவில் வியாழக்கிழமை நிவாரண உதவியை வழங்கினாா்.
கள்ளக்குறிச்சியில் 5 இடங்களில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி நகர வாகன ஓட்டுநா்கள் 516 போ், சலவைத் தொழிலாளா்கள் 60 போ், முடி திருத்துவோா் 72 போ், தனியாா், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 56 போ், நீலமங்களம் நரிக்குறவா்கள் சமுதாயத்தைச் சோ்ந்த 170 போ் உள்ளிட்ட 1,001 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, அரை லிட்டா் எண்ணெய், அரை கிலோ பருப்பு, காய்கறி தொகுப்பு, கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலா் ஆ.அங்கையா்கண்ணி, சங்கராபுரம் எம்.எல்.ஏ. தா.உதயசூரியன் மற்றும் கட்சித் தொண்டா்கள், வட்டாட்சியா்கள் கோ.ரகோத்தமன், எஸ்.சையத்காதா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.