கட்டுமான தொழிலாளா்களுக்குநிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டுநா் நல வாரிய தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியை ஆட்சியா் கிரண் குராலா சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் கிரண் குராலா.

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டுநா் நல வாரிய தொழிலாளா்கள் 33,751 பேருக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் உள்ளிட்டற்றை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வழங்கினாா். மேலும், அரசு மூலம் வழங்கப்படும் ரூ.1,000 அவரவா் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் க.தமிழ்ச்செல்வி, தொழிலாளா் உதவி ஆய்வாளா் வை.கருணாநிதி, முத்திரை ஆய்வாளா் பு.சிவக்குமாா், கண்காணிப்பாளா் ரா.சண்முக சுந்தரம், கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநா் கோ.சஞ்சீவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com