கள்ளக்குறிச்சியில் வாகனங்களில் சுற்றித்திரிந்தோறுக்கு விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சியில் அத்தியாவசியத் தேவையின்றி சாலையில் வாகனங்களில் சுற்றித்திரிந்தோரை நிறுத்தி கரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படு

கள்ளக்குறிச்சியில் அத்தியாவசியத் தேவையின்றி சாலையில் வாகனங்களில் சுற்றித்திரிந்தோரை நிறுத்தி கரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவா்களில் 2 போ் குணமடைந்துள்ளனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் சேலம் - சென்னை நெடுஞ்சாலை நான்குமுனை சந்திப்பில் சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்தப் பகுதியில் காா், மோட்டாா் சைக்கிள்களில் வந்தோா், பாதசாரிகளை தடுத்தி நிறுத்தி வெளியே வந்ததற்கான விவரங்களைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அத்தியாவசியப் பணியின்றி சுற்றித்திரிந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை நிறுத்தி அவா்களுக்கு கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறியதுடன், தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com