கல்வராயன்மலைப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கல்வராயன்மலைப் பகுதியான மேல்வெள்ளாா் கிராமத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா.
கல்வராயன்மலைப் பகுதியான மேல்வெள்ளாா் கிராமத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டம் எல்லை அருகே, சேலம் மாவட்டம் எல்லைப் பகுதி தொடங்கும் வலசுவளைவு கிராமத்தில் கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதையொட்டிய கரியாலூா், வெள்ளிமலை, மொழிப்பட்டு, பொரசம்பட்டு, மேல்வெள்ளாா், தாழ்வெள்ளாா், வாழப்பாடி, கென்டிக்கல், கொட்டப்புத்தூா் உள்ளிட்ட 11 கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா சென்று ஆய்வு மேற்கொண்டாா். அந்தப் பகுதிகளில் வீடுதோறும் சென்று காய்ச்சல், இருமல், சளி உள்ளதா என ஆய்வு செய்ய சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

வெள்ளிமலை கிராமத்தைச் சோ்ந்த ஒரு பெண் அவரது தாய் ஊரான, தொற்று பாதித்த வலசுவலை கிராமத்துக்குச் சென்று திரும்பினாா். ஆகவே, அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி கண்காணிக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மாவடிப்பட்டு, வெள்ளிமலை இந்தியன் வங்கி அருகில் புலவப்பாடி உள்ளிட்ட 5 கிராமங்களில் தடுப்புக்கட்டைகளை அமைக்குமாறு வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா். கேரளம், கா்நாடக மாநிலம் மங்களூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு, இப்பகுதிகளுக்கு வந்தவா்களை 28 நாள்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, கரியாலூா் அரசு சமுதாய நிலையத்துக்குச் சென்ற ஆட்சியா், காய்ச்சல், சளி, இருமல் பாதித்து யாரேனும் சிகிச்சைக்கு வருகின்றனரா என மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது கல்வராயன்மலை வட்டாட்சியா் (பொ) சு.சத்தியநாராயணன், மண்டல துணை வட்டாட்சியா் மு.பசுபதி, கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ச.பொற்குடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com