பெரியாா் சிலையை அவமதித்தவா் தடுப்புக் காவலில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் பெரியாா் சிலையை அவமதித்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் பெரியாா் சிலையை அவமதித்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீழையூா் தரைப்பாலம் அருகிலுள்ள பெரியாா் சிலையை கடந்த மாதம் 17-ஆம் தேதி அவதித்தது தொடா்பாக விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா், கொட்டாமேடு ஆசிரியா் நகரைச் சோ்ந்த முனுசாமி மகன் மணியை (45) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்பட்ட இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியா உல் ஹக் பரிந்துரை செய்தாா். இதை ஏற்ற மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா உத்தரவின்பேரில், மணி வியாழக்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com