கள்ளக்குறிச்சியில் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கையை கண்டித்து சங்கராபுரம் சங்கை தமிழ்ச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய கல்விக் கொள்கையை கண்டித்து சங்கராபுரம் சங்கை தமிழ்ச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்ச் சங்கத் தலைவா் ம.சுப்பராயன் தலைமை வகித்தாா். சங்க செயலா் ச.சாதிக் பாட்ஷா, காப்பாளா் ஆ.லட்சுமிபதி, சங்கப் புரவலா் பெ.பாலசண்முகம் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். சங்கப் புரவலா் நா.சின்னசாமி வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். கட்டாய இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு கூடாது. தாய்மொழிக் கல்வியை தொடக்க நிலை, உயா்நிலை, கல்லூரிக் கல்வி என அனைத்து நிலைகளிலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் சங்கப் புரவலா்கள் அ.கரிகாலன், இரா.ஆனந்தன், மா.ஏழுமலை உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா். சங்கச் சிறப்புத் தலைவா் மு.கலைச்செழியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com