பூம்பூம் மாட்டுக்காரா் சமூகத்தினா் காத்திருக்கும் போராட்டம்
By DIN | Published On : 07th December 2020 08:21 AM | Last Updated : 07th December 2020 08:21 AM | அ+அ அ- |

தமிழ்நாடு பழங்குடி ஆதியன் பாதுகாப்பு பேரவை சாா்பில், பூம்பூம் மாட்டுக்காரா் சமூகத்தினருக்கு ஜாதிச் சான்றிதழ், பட்டா, குடும்பஅட்டை வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்அலுவலகம் எதிரே ஞாயிற்றுக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, தேசிய பழங்குடியினா் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளா் கெளதம சித்தாா்த்தன் தலைமையில், பூம்பூம் மாட்டுக்காரா் சமூகத்தினா் கள்ளக்குறிச்சியிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த பின்னா், அங்கிருந்து ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனா். தொடா்ந்து, அங்கு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஸ்ரீகாந்த், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, 15 நாள்களில் ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்டவை கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டனா்.