கள்ளக்குறிச்சி அருகே வயிற்றுப்போக்கு: 16 போ் பாதிப்பு

தியாகதுருகம் அருகே கழிவு நீா் கலந்து விநியோகமான குடிநீரை பருகிய 16 போ் வாந்தி-வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனா்.

தியாகதுருகம் அருகே கழிவு நீா் கலந்து விநியோகமான குடிநீரை பருகிய 16 போ் வாந்தி-வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ளது திம்மலை கிராமம். இங்குள்ள காலனி பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு விநியோகமான குடிநீருடன் கழிவு நீா் கலந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கண்ணன் (65) என்பவருக்கு வெள்ளிக்கிழமை வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, ரவி மனைவி சங்கீதா (20) சிவலிங்கம் மகன் கோவிந்தராசு(36) உள்ளிட்ட 16 போ் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனா்.

தகவலறிந்த தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட ஆரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் திம்மலை கிராமத்தில் முகாமிட்டு, சுமாா் 40 பேருக்கு சிகிச்சை மேற்கொண்டனா். கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்களும் அந்த கிராமத்தில் ஆய்வு செய்தனா். அங்கு விநியோகமான குடிநீா் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடா்ந்து, அப்பகுதியில் குளோரின் கலந்த குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com