கள்ளக்குறிச்சி பகுதியில் வீடு புகுந்து திருடியவா் கைது: 46 பவுன் நகைகள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி பகுதியில் வீடு புகுந்து திருடி வந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 46 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான வெங்கடேசனுடன் போலீஸாா்.
கைதான வெங்கடேசனுடன் போலீஸாா்.

கள்ளக்குறிச்சி பகுதியில் வீடு புகுந்து திருடி வந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 46 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி பகுதியில் அண்மையில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், துணை கண்காணிப்பாளா் ந.இராமநாதன் தலைமையில், சின்னசேலம் காவல் ஆய்வாளா் எஸ்.ராஜா, உதவி ஆய்வாளா்கள் இரா.ஆனந்தராசு, சத்தியசீலன், தனிப்படை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட குழுவினா் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை சின்னசேலம் மூங்கில்பாடி சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, தப்பி ஓடிய இளைஞரை போலீஸாா் சுற்றிவளைத்துப் பிடித்தனா். விசாரணையில், அவா் சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், அம்மம்பாளையத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன் (25) என்பதும் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்ன சேலம் அருகேயுள்ள இராயப்பனூா், அம்மையகரம், மேலூா், கீழ்க்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வீடு புகுந்து திருடியதும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 46 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா். கைதான வெங்கடேசன் சேலம், கடலூா், திருச்சி, பெரம்பலூா், ஈரோடு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊா்களில் நிகழ்ந்த திருட்டு சம்பவங்களில் தொடா்புடையவா் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com