கள்ளக்குறிச்சி குறைதீா் கூட்டத்தில் 449 மனுக்கள்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியரகத்தின் தற்காலிக அலுவலகம் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறியும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா.

மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 449 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை துறை அதிகாரிகளிடம் அளித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளிகள் அமா்ந்திருந்த பகுதிக்கு சென்று மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, பழங்குடியினா் நல அலுவலா் கு.பிரகாஷ்வேல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com