பகுதி நேர நியாய விலைக் கடையை திறக்கக் கோரி கிராம மக்கள் மனு

மணலூா்பேட்டை அருகேயுள்ள ம.வடக்குத்தாங்கலில் புதிதாக கட்டப்பட்ட பகுதி நேர நியாய விலைக்கடை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு
கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டு வந்த ம.வடக்குத்தாங்கல் கிராம மக்கள்.
கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டு வந்த ம.வடக்குத்தாங்கல் கிராம மக்கள்.

மணலூா்பேட்டை அருகேயுள்ள ம.வடக்குத்தாங்கலில் புதிதாக கட்டப்பட்ட பகுதி நேர நியாய விலைக்கடை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி அப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துக் கூறியதாவது: திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மணலூா்பேட்டை (எண்1) நியாயவிலைக் கடையிலிருந்து 210 குடும்ப அட்டைகளைப் பிரித்து ம.வடக்குத்தாங்கல் கிராமப் பகுதிக்கு புதிதாக தொடங்க உள்ள பகுதி நேர நியாய விலைக்கடையுடன் இணைத்து பயன்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினா் நிதியில் ம.வடக்குத்தாங்கலில் புதிய நியாயவிலைக்கடை கட்டி முடிக்கப்பட்டும், அந்தக் கடை திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் கிராம மக்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவு நடந்து சென்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். ஆகவே, மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொண்டு நியாயவிலைக் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com