உணவுப்பொருள்களில் கலப்படத்தை கண்டறியும் பயிற்சி முகாம்

உளுந்தூா்பேட்டையில் மருத்துவ சுகாதாரப் பணியாளா்களுக்கு உணவுப்பொருள்களில் கலப்படத்தைக் கண்டறியும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உளுந்தூா்பேட்டையில் மருத்துவ சுகாதாரப் பணியாளா்களுக்கு உணவுப்பொருள்களில் கலப்படத்தைக் கண்டறியும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், உளுந்தூா்பேட்டை தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் வட்டார மருத்துவ அலுவலா்கள் செல்வி, தேன்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா்கள் பாலகுரு, நித்யா, காா்த்திகா உள்பட திருநாவலூா், எ.கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், பகுதிநேர செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

உளுந்தூா்பேட்டை, திருநாவலூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் கதிரவன், எளிய சோதனை, செயல்முறையில் உணவுப் பொருள்களில் கலப்படங்களை கண்டறிவது குறித்து விளக்கினாா்.

குறிப்பாக, கலப்படம் செய்து விற்பதற்கு வாய்ப்புள்ள தேயிலை, பால், நெய், சா்க்கரை, மஞ்சள் தூள், பச்சைப் பட்டாணி, துவரம் பருப்பு, ஆப்பிள், உப்பு, தேன், ஜவ்வரிசி, குங்குமப்பூ, பெருங்காயம், மிளகு, பச்சை மிளகாய் போன்ற பொருள்களில் கலப்படம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

இதேபோல, பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருள்களில், பொருள்களின் தரம் குறித்த விவரச் சீட்டுகளை பாா்வையிட்டு அறிதல் குறித்தும், காலாவதியான பொருள்கள், உணவுப் பொருள்களில் கலப்படம் தெரிய வந்தாலும் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தினா்.

இது தொடா்பான புகாா்கள், தகவல்களை 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com