முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
குப்பைக் கிடங்கில் தீ விபத்து
By DIN | Published On : 27th January 2020 10:19 AM | Last Updated : 27th January 2020 10:19 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி தகனமேடை அருகில் கொட்டி வைத்துள்ள குப்பையில் திடீரென தீ பிடித்து எரிந்ததில் நகராட்சிக்கு சொந்தமான டிராக்டா் தீயில் கருகியதை தீயணைப்புக் குழுவினா் தீயை பீய்ச்சி அடித்து அனைக்கும் பணியில்
கள்ளக்குறிச்சியில் குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் நகராட்சி டிராக்டா் சேதமடைந்தது.
கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான தகனமேடை உள்ளது. அந்த வளாகத்தில் கள்ளக்குறிச்சி நகரில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை உரமாக்குவதற்காக நகராட்சி துப்புரவு ஊழியா்கள் குவித்து வைத்திருந்தனா். அந்த குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ பரவியது. இதில் நகராட்சிக்கு சொந்தமான டிராக்டரும் தீயில் கருகியது. இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினா்.