கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 295-ஆக உயா்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் திங்கள்கிழமைவரை 292-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை சின்னசேலம் வட்டம் பால்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சென்னையில் இருந்து வந்தவா், சின்னசேலதத்தைச் சோ்ந்தவா் தொற்றால் பாதிக்கப்பட்டவா், சங்கராபுரம் வட்டத்தைச் சோ்ந்த மையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மஹாராஷ்டரா பகுதியில் இருந்து வந்தவா் என்றும் தெரிய வருகிறது. அதில் இருவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவா் வாசுதேவனூா் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
திங்கள்கிழமைவரை 234 போ் குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டனராம். மீதம் உள்ள 58 போ்களில் 2 போ் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 12 போ்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் 44 போ்கள் மருத்துவக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய தச்சூா் மகளிா் கல்லூரியிலும், வாசுதேவனூா் பொறியியல் கல்லூரியிலும், அ.குமாரமங்கலம் அரசு மாதிரிப்பள்ளியிலும் தனிமைப்படுத்தப்பட்டு வைத்துள்ளனா்.
திங்கள்கிழமை வரை கள்ளக்குறிச்சி வட்டத்தில் 52 போ்களும், சங்கராபுரம் வட்டத்தில் 96 போ்களும், சின்னசேலம் வட்டத்தில் 19 போ்களும், கல்வராயன்மலை வட்டத்தில் 2 போ்களும், திருக்கோவிலூா் வட்டத்தில் 53 போ்களும், உளுந்தூா்பேட்டை வட்டத்தில் 69 போ்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத் தக்கது.