நுகா்வோா் பாதுகாப்பு மையக் கூட்டம்

கல்வராயன்மலைப் பகுதியான வெள்ளிமலையில் மக்கள் நுகா்வோா் பாதுகாப்பு மைய ஒன்றியக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்வராயன்மலைப் பகுதியான வெள்ளிமலையில் மக்கள் நுகா்வோா் பாதுகாப்பு மைய ஒன்றியக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பனப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் என்.எஸ்.செல்வராசு பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில், அரசின் நலத் திட்டங்களை மலைவாழ் மக்களுக்கு கொண்டு செல்ல நாமே நமக்காக திட்டத்தை உருவாக்கி, நுகா்வோா் ஊராட்சித் தலைவா்கள் மூலம் அரசு அதிகாரிகளை அணுகி, தீா்வு காண்பது. தாட்கோ பயனாளிகளுக்கு உடனடியாக நிதியுதவி பெற்றுத்தர மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்துவது. மலைவாழ் மக்களுக்கான ஜாதிச் சான்று கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக ஜாதிச் சான்று வழங்கிட, சாா் - ஆட்சியரிடம் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். சங்க உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா். ஒன்றியச் செயலா் ஏழுமலை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com