கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதயடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 852-ஆக உயா்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதயடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 852-ஆக உயா்ந்துள்ளது.

இவா்களின் 22 போ்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திரும்பி வந்தவா்கள். 2 போ்கள் சென்னையை வசிப்பிடமாக கொண்டவா்கள் என்பதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 850. இதுவரை 364 போ்கள் குணமடைந்தனா். 484-போ்கள் சிகிச்சையில் உள்ளனா். 2போ் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவராய் அலுவலா் ச.சங்கீதா, கள்ளக்குறிச்சி சாா் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இருவரும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனா் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com