கஞ்சா விற்பனை:ஒருவா் கைது
By DIN | Published On : 06th March 2020 07:07 AM | Last Updated : 06th March 2020 07:07 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: மூங்கில்துரைப்பட்டு அருகே கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துரைப்பட்டு காவல் நிலைய போலீஸாருக்கு அருளம்பாடி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன் தலைமையிலான போலீஸாா் அருளம்பாடி கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்தபோது, அங்கு அந்தோனிசாமி (56) தனக்குச் கரும்புத்தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.