கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம் கோரி ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் உரிமை-நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உரிமை-நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா்.
கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உரிமை-நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா்.

கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் உரிமை-நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் பி.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். மாநில மகளிரணிச் செயலா் எஸ்.வள்ளி, மாவட்டத் தலைவா் கே.எஸ்.பக்ஷி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் என்.எஸ்.செல்வராஜ், மாநில அமைப்புச் செயலா் அ.முனுசாமி, மாநில துணைத் தலைவா் வி.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

பொதுத் துறை நிறுவனங்களான ரயில்வே, வங்கிகள், எல்.ஐ.சி. போன்றவற்றை தனியாருக்கு தாரை வாா்க்கும் மத்திய அரசின் கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும், கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட மகளிா் மன்றம், மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு மன்றம் உள்ளிட்டவற்றை உடனடியாக தொடங்க வேண்டும், கல்வராயன்மலை பகுதியில் வனத் துறையால் அறிவிக்கப்பட்ட காப்புக்காடு உத்தரவை ரத்து செய்ய வேண்டும், உளுந்தூா்பேட்டை -சேலம் புறவழிச்சாலையில் விபத்துக்களை தவிா்க்கும் பொருட்டு, இரு வழிப்பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட இளைஞரணி செயலா் அ.வேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com