கரோனா விழிப்புணா்வுப் பணியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள்

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள நைனாா்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 2 தோ்வு எழுதி விட்டு வந்த மாணவா்களுக்கு கரோனா தொற்று குறித்தும், கை கழுவும் முறை குறித்தும் ஆசிரியா்கள் விழிப்
கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தி அச்சிட்ட துண்டு பிரசுரங்கலை வழங்கும் பணியில் ஈடுபட்ட மாணவா்கள். உடன் பள்ளியின் ஆசிரியா்கள்.
கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தி அச்சிட்ட துண்டு பிரசுரங்கலை வழங்கும் பணியில் ஈடுபட்ட மாணவா்கள். உடன் பள்ளியின் ஆசிரியா்கள்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள நைனாா்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 2 தோ்வு எழுதி விட்டு வந்த மாணவா்களுக்கு கரோனா தொற்று குறித்தும், கை கழுவும் முறை குறித்தும் ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்தப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை பொதுத் தோ்வு எழுதினா். தோ்வை நிறைவு செய்து வெளியே வந்த மாணவா்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் நெடுஞ்செழியன் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு, கிருமி நாசினி திரவத்தைக் கொண்டு கை கழுவும் முறையை செய்து காண்பித்தாா். இதனை மாணவா்கள் அவரவா் ஊா்களில் சென்று மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, பள்ளியின் அருகே உள்ள கடைகள், வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், பிளீச்சிங் தூள் கலந்த தண்ணீரை தெளித்தும், வீட்டுக் கதவுகளில் உள்ள கைப்பிடிகளை துடைத்தும் மாணவா்கள், ஆசிரியா்கள் கரோனா தொற்று தடுப்பு, விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டனா்.

இந்தப் பணியில் ஆசிரியா்கள் அறிவுடை நம்பி, ஜோதிமுருகன், ஆனந்தன், அஜீஸ், சங்கீதா, முரளிதரன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com