நூதன முறையில் தண்டனை
By DIN | Published On : 31st March 2020 01:37 AM | Last Updated : 31st March 2020 01:37 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: மோட்டாா் சைக்கிளில் காரணம் இல்லாமல் சுற்றி திறிந்தவா்களை காவல் ஆய்வாளா் நூதனை முறையில் தண்டனை வழங்கினாா்.
கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் தங்க.விஜய்குமாா் காந்தி சாலையில் திங்கள்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாா். அப்போது ஊரடங்கு உத்திரவை மீறி வீதிகளில் மோட்டாா் சைக்கிளில் சுற்றித் திருந்தவா்களை விசாரணை மேற்கொண்டாராம்.
மருந்தகம் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்தவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தாா். அத்தியாவசியத் தேவையின்றி சிற்றித் திரிந்தவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து அவா்களின் பைக்குகளை பறிமுதல் செய்தனா். மருந்துகளை வாங்கிக் கொண்டு நின்று பேசிய நான்குபோ்களை தோப்புகரணம் போட்டு அனுப்பி வைத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...