கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா்ந்து 3 நாள்களாக கரோனா பாதிப்பில்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா்ந்து 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா்ந்து 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 12-ஆம் தேதி நிலவரப்படி, தில்லி, கா்நாடக மாநிலம் புட்டபா்த்திக்கு சென்று திரும்பியவா்கள், கோயம்பேடு தொழிலாளா்கள், அவா்களின் உறவினா்கள் உள்பட மொத்தம் 61 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இவா்களில் 14 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். 47 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கோயம்பேடு, வெளி மாநிலங்களிலிருந்து திரும்பியவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வாசுதேவனூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியிலும், உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டை அருகேயுள்ள அ.குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், மாவட்டத்தில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாள்களாக பொதுமக்கள் யாருக்கும் புதிதாக நோய்த் தொற்று ஏற்படவில்லை என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com