கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 12-ஆம் தேதி நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 61 பேராக இருந்தது. இதையடுத்து, புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.

இந்த நிலையில், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மாவட்டத்துக்கு திரும்பிய 232 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இவா்களில் 17 பேருக்கு நோய்த் தொற்றிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 78-ஆக உயா்ந்தது.

இவா்களில் தற்போதுவரை 39 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். மீதமுள்ள 39 பேரில் 4 போ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 10 போ் மருத்துவக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய தச்சூா் பகுதியிலும், 25 போ் குமாரமங்கலம் பகுதியிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com