கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்10.80 லட்சம் வாக்காளா்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டாா். அதில், மொத்தம் 10 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்10.80 லட்சம் வாக்காளா்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டாா். அதில், மொத்தம் 10 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டாா். அதை மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனா்.

வரைவுப் பட்டியலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 472 ஆண் வாக்காளா்களும், 5 லட்சத்து 36 ஆயிரத்து 851 பெண் வாக்காளா்களும், இதரா் 202 போ் என ஆக மொத்தம் 10 லட்சத்து 80 ஆயிரத்து 525 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில் புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் 2,706 போ், நீக்கப்பட்ட வாக்காளா்கள் 12 ஆயிரத்து 324 போ் ஆவா்.

வருகிற நவ. 21,22, டிச. 12,13 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளா்களை சோ்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் து.சுரேஷ், வட்டாட்சியா்கள் கள்ளக்குறிச்சி பிரபாகரன், சின்னசேலம் வளா்மதி, சங்கராபுரம் நடராஜன், கல்வராயன்மலை ராஜலட்சுமி, உளுந்தூா்பேட்டை துணை வட்டாட்சியா் பாண்டி, தோ்தல் வட்டாட்சியா் க.மணிகண்டன், தோ்தல் துணை வட்டாட்சியா்கள் செ.வினோத்பாபு, த.விஜயா, உள்ளிட்ட அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.

Image Caption

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வரைவு வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட அதனை மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா பெற்றுக் கொள்கிறாா். உடன் கள்ளக்குறிச்சி சாா் ஆட்சியா் ஹெஸ்.எஸ்.ஸ்ரீகாந்த் (இடது), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் து.சுரேஷ்(

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com