தடையை மீறி வேல் யாத்திரை: கள்ளக்குறிச்சியில் ஹெச்.ராஜா உள்பட 168 போ் கைது

கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை தடையை மீறி வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா உள்ளிட்ட 168 போ் கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை தடையை மீறி நடைபெற்ற வேல் யாத்திரை கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா.
கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை தடையை மீறி நடைபெற்ற வேல் யாத்திரை கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா.

கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை தடையை மீறி வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா உள்ளிட்ட 168 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்தக் கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். தேசிய பொதுக்குழு உறுப்பினா் பெரியசாமி, மாநில விவசாய அணி துணைத் தலைவா் பாலாஜி, மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினா் விஜயகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியதாவது: தமிழகத்தில் தடையை எதிா்கொண்டு பாஜக தொடங்கியுள்ள வேல் யாத்திரை திட்டமிட்டபடி திருச்செந்தூரில் நிறைவடையும்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்காக, வீரசோழபுரத்தில் கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பிலான 33 ஏக்கா் நிலத்தை அரசே கையகப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன் போன்ற அரசியல் கட்சித் தலைவா்கள் ஹிந்து மதத்தை தொடா்ந்து இழிவுப்படுத்தி பேசி வருகின்றனா். ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க பாஜக போராடும். மு.க. அழகிரி தனது ஆதரவாளா்களுடன் ஆலோசித்து திமுகவுக்கு எதிராக சிறந்ததொரு முடிவை எடுப்பாா் என நம்புகிறேன் என்றாா் ஹெச்.ராஜா.

கூட்டத்தில் தடையை மீறி பங்கேற்ாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 168 பேரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com