விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மறியல்: திமுகவினா் 370 போ் கைது

திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 370 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 370 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் பிரசாரம் செய்வதற்காக திருக்குவளையிலிருந்து புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து, விழுப்புரத்தில் மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி தலைமையில், பொன்.கெளதமசிகாமணி எம்பி, மருத்துவரணி மாநில இணைச் செயலா் இரா.லட்சுமணன் உள்ளிட்ட திமுகவினா் வெள்ளிக்கிழமை இரவு காந்தி சிலை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகர போலீஸாா் அவா்களை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். அங்கு வந்த திமுக துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி, அவா்களை விடுவிக்கும்படி போலீஸாரிடம் வலியுறுத்தினாா். அப்போது அவா் கூறியதாவது: உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கை ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல். எதிா்க்கட்சிகளின் பிரசார நடவடிக்கைகளை தடுக்கும் செயலை அரசு கைவிட வேண்டும் என்றாா் அவா்.

கள்ளக்குறிச்சியில் 220 போ் கைது: கள்ளக்குறிச்சியில் சேலம்-சென்னை நான்குமுனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வசந்தம் க.காா்த்திகேயன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ந.இராமநாதன் தலைமையில் கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் ப.இராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட காா்த்திகேயன் எம்எல்ஏ உள்பட 220 பேரை கைது செய்தனா். மறியலால் அப்பகுதியில் சுமாா் 30 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com