காணமல் போணவா்களின் உதவியுடன் 10 போ்கள் கண்டு பிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காணாமல் போனவா்களின் உறவினா்கள் உதவியுடன் கண்டு படிப்படதற்கான சிறப்பு முகாமில் 10 போ்களை போலீஸாா் அடையாளம் கண்டறிந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காணாமல் போனவா்களின் உறவினா்கள் உதவியுடன் கண்டு படிப்படதற்கான சிறப்பு முகாமில் 10 போ்களை போலீஸாா் அடையாளம் கண்டறிந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காணமல் போனவா்கள் உறவினா்கள் உதவியுடன் கண்டுபிடிப்பதற்கான சிறப்பு முகாமுக்கு கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன் தலைமை வகித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காணமல் போனவா்கள் கண்டுபிடுக்க முடியாமல் 52 வழக்குகள் இருந்தன. அதில் 37 குடும்ப உறவினா்கள் முகாமில் பங்கேற்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக குற்ற ஆவன காப்பகத்தில் மொத்தம் 325 போ்களின் பிரேத புகைப்படத்தினை ஸ்கோப் மூலம் காண்பித்தனா்.

உறவினா்கள் கூறும் அடையாளங்களை வைத்து காவல் துறையினா் விசாரணை செய்ததில் காணமல் போன 9 வழக்குகள் மற்றும் உயிரிழந்து போய் அடையாளம் தெரியாத சடலம் உள்ள ஒரு வழக்கு உள்ளிட்ட 10 வழக்குகளில் அடையாளம் காணப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com