சம்பா பயிரை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து பயனடையுமாறு வேளாண்மை இணை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து பயனடையுமாறு வேளாண்மை இணை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் கி.வேலாயுதம் விடுத்த செய்திக் குறிப்பு:

தற்போது சம்பா நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படுவதிலிருந்து பயிா்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.426 மட்டும் செலுத்தி அருகிலுள்ள பொது சேவை மையம், அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சிட்டா, அடங்கல், ஆதாா், வங்கிக் கணக்கு புத்தக நகல் உள்ளிட்டவற்றை இணைத்து வருகிற 30-ஆம் தேதிக்குள் சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

வருகிற 24,25,26 தேதிகளில் புயலுடன் கூடிய அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், வருகிற 23-ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்ய காலக்கெடு இருப்பினும், பயிா் சேதமடைந்த பிறகு, காப்பீடு செய்வதை காப்பீடு நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com