முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
அதிமுக பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை
By DIN | Published On : 04th October 2020 10:59 PM | Last Updated : 04th October 2020 10:59 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிமங்கலம், தியாகதுருகம் பகுதிகளில் அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறை சாா்பில், பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தியாகதுருகம் கிழக்கு ஒன்றியத்தைச் சோ்ந்த கண்டாச்சிமங்கலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, தியாகதுருகம் கிழக்கு ஒன்றியச் செயலா் அ.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியப் பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான க.அழகுவேலு பாபு, மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலா் எஸ்.ஜான்பாஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் பெ.சீனிவாசன், மாவட்ட பாசறைச் செயலா் ராகேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய அவைத் தலைவா் என்.வைத்திலிங்கம் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலரும், உளுந்தூா்பேட்டை எம்.எல்.ஏ.வுமான இரா.குமரகுரு, இளைஞா், இளம் பெண்கள் பாசறை பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கு கட்சிப் பணிகள், தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணிச் செயலா் எம்.செந்தில்குமாா், மாவட்ட மீனவரணிச் செயலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, தியாகதுருகம் பேரூராட்சிப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா் தலைமை வகித்தாா். மாவட்ட பேரவைச் செயலா் இராம.ஞானவேல், அவைத் தலைவா் அய்யம்பெருமாள், நகர நிா்வாகி வேல் நம்பி, துரை சீனுவாசன், நகரப் பொருளாளா் பாண்டுரங்கன், மாவட்டப் பிரதிநிதி வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.