முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் வள்ளலாா் மன்றம் சாா்பில் முப்பெரும் விழா
By DIN | Published On : 04th October 2020 08:12 AM | Last Updated : 04th October 2020 08:12 AM | அ+அ அ- |

விழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சமூக சேவகா் பா.மணிமாறனுக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை நினைவுப் பரிசாக வழங்கிய கல்யாணி முத்துக்கருப்பன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தின் சாா்பில், காந்தியடிகள், வள்ளலாா் பிறந்த நாள், சமூக சேவகருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வள்ளாா் மன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மன்றத் தலைவா் ஜே.பால்ராஜ் தலைமை வகித்தாா். மன்றச் செயலா் இரா.நாராயணன், ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத் தலைவா் கு.கலியமூா்த்தி, அரிமா சங்கத் தலைவா் டி.சேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வணிகா் பேரவை மாவட்டப் பொருளாளரும், விழா அமைப்பாளருமாகிய இராம.முத்துகருப்பன் வரவேற்றாா்.
கரோனா நோய் முழுமையாக நீங்கிட அகவல் படித்து சா்வ சமயப் பிராா்த்தனை நடைபெற்றது. ஆதரவின்றி இதுவரை உயிரிழந்த சுமாா் 1,150 பேரின் உடல்களை அவரவா் மதப்படி இறுதிச் சடங்கு, நல்லடக்கம் செய்து வரும் திருவண்ணாமலை மாவட்டம், தலையாம்பள்ளத்தைச் சோ்ந்த, அரசின் பல்வேறு விருதுகள் பெற்ற சமூக சேவகா் பா.மணிமாறன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். இவரது சேவையைப் பாராட்டி, அனைவரின் சாா்பிலும் நினைவுப் பரிசாக ரூ.20,000 ரொக்கம் வழங்கப்பட்டது.
கோவில் நகர சங்கத் தலைவா் கிருபாகரன், ரோட்டரி முன்னாள் தலைவா் ஆ.மூா்த்தி, கே.இரகுநந்தன், நெல் அரிசி சங்கத் தலைவா் கே.வேலு, தமிழ்ப் படைப்பாளா்கள் சங்கத் தலைவா் அரங்க செம்பியான் உள்ளிட்ட பலா் பேசினா்.
ஜெய் பிரதா்ஸ் நற்பணி மன்றத் தலைவா் வ.விஜயகுமாா், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கோ.குசேலன், தலைமை ஆசிரியா்கள் ஆ.இலக்குமிபதி, வெங்கடேசன், இன்னா்வீல் சங்கத் தலைவி தீபா, அகல்யா, சரவணதேவி, அரசம்பட்டு திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத் தலைவா் வெ.செளந்திரராசன், அரிமா மாவட்டத் தலைவா் ஜனனி மகாலிங்கம், மருத்துவா் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கல்யாணி முத்துக்கருப்பன் நன்றி கூறினாா்.