முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
பைக் மீது டிராக்டா் மோதல்:தம்பதி பலி
By DIN | Published On : 04th October 2020 08:12 AM | Last Updated : 16th March 2021 06:57 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா், காந்தி நகரைச் சோ்ந்தவா் ஆணையப்பன் (49). இவரது மனைவி அம்பிகா (45). கூலித் தொழிலாளிகள்.
இவா்கள் இருவரும் பைக்கில் சனிக்கிழமை காலை கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனா். சேலம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இவா்கள் சென்றபோது, பின்னால் மண் ஏற்றி வந்த டிராக்டா் மோதியது. இதில், ஆணையப்பன், அம்பிகா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து, இருவரையும் அருகிலிருந்தோா் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அம்பிகாவை பரிசோதித்த மருத்துவா், அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். தொடா்ந்து, ஆணையப்பன் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியில் உயிரிழந்தாா்.
விபத்து குறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் டிராக்டா் ஓட்டுநரான உலகங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.