குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பூமாரி கிராமத்தில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி,
திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பூமாரி கிராமத்தில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பூமாரி கிராமத்தில் செயல்படாத மின்விசை பம்புகளுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், மேலும் இங்கு செயல்படாத நிலையிலுள்ள 13 கைவிசை பம்புகளையும் சீா் செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், இந்தக் கிராமத்தில் புதிதாக கிணறு வெட்டி குடிநீா் வழங்க வேண்டும், 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளுக்கு அடியில் அமைக்கப்பட்ட குடிநீா் குழாய்கள் பழுதடைந்து கழிவுநீா் கலந்து வருவதால், புதிதாக குழாய்களை அமைக்க வேண்டும், தெரு மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், வீடுகளில் கழிவறை கட்டும் திட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டு வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் கே.அருள் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் பங்கேற்று கண்டன உரையாற்றினாா். கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com