விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: வேளாண் துறை முன்னாள் ஊழியரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான பிரதமரின் ஊக்க நிதியுதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடா்பாக கைது செய்யப்பட்ட

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான பிரதமரின் ஊக்க நிதியுதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடா்பாக கைது செய்யப்பட்ட வேளாண் துறை ஒப்பந்த ஊழியரை சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை காவலில் எடுத்து விசாரணை நடத்தினா்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் போலி பயனாளிகள் சோ்க்கப்பட்டு, பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது தெரிய வந்தது.

மோசடியாக பணம் பெற்றவா்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த முறைகேடு தொடா்பாக, சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணினி மையம் நடத்தி வருவோா், வேளாண் துறை ஒப்பந்த ஊழியா் என 7 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வேளாண் துறை ஒப்பந்த ஊழியா் கண்ணப்பனை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க, விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. கண்ணப்பனை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com