கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு
By DIN | Published On : 21st September 2020 11:30 PM | Last Updated : 21st September 2020 11:30 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற ப.இராஜ தாமரை பாண்டியன்
கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக ப.இராஜதாமரைபாண்டியன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த தங்க.விஜய்குமாா், விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் காவல் நிலையத்துக்கு பணி மாறுதலாகிச் சென்று விட்டாா்.