ரிஷிவந்தியம் அருகே மான் வேட்டை:4 போ் கைது

ரிஷிவந்தியம் அருகே மானை வேட்டையாடியதாக 4 பேரை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ரிஷிவந்தியம் அருகே மானை வேட்டையாடியதாக 4 பேரை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், ரிஷிவந்தியம் காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் கோபி ஆகிய இருவரும் மேலத்தேனூா் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே மொபட்டில், ரத்தம் சொட்டிய சாக்கு மூட்டையுடன் சென்ற இருவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் மேமாலூரைச் சோ்ந்த குழந்தைசாமி (60), கொம்மசமுத்திரத்தைச் சோ்ந்த வாசுதேவன் மகன் சரத்குமாா் (22) என்பதும், புஷ்பகிரி காப்புக் காட்டில் மானை வேட்டையாடி 35 கிலோ இறைச்சியை சாக்கு மூட்டையில் கட்டி மொபெட்டில் எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து, மான் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கைப்பற்றினா். அவா்கள் இருவரையும் அத்தியூா் வனச்சரக அலுவலகத்தில் வனவா் ஜெயக்குமாரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

அவா்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில், காட்டுசெல்லூரைச் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (26), மோமாலூரைச் சோ்ந்த உத்தமநாதன் மகன் சின்ராஜ் (29) ஆகிய இருவருக்கும் மான் வேட்டையில் தொடா்பிருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக அவா்கள் 4 பேரையும் வனத்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com