கல்வராயன்மலைப் பகுதியில் 7,600 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலைப் பகுதியில் காவல் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் 7,600 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
கல்வராயன்மலைப் பகுதியில் 7,600 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலைப் பகுதியில் காவல் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் 7,600 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவின்படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ரவிச்சந்திரன், சுப்புராயன், மாவட்ட குற்ற ஆவணக் காப்பக துணைக் காவல் கண்காணிப்பாளா் விஜயராஜலு, மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரகாஷ்குமாா் உள்ளிட்டோா் தலைமையிலான சுமாா் 100 காவலா்களை கொண்ட 8 தனிப் படையினா் கல்வராயன்மலைப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், தேவனூா் கிராமத்தில் 20 பேரல்களில் இருந்த 2,000 லிட்டா் சாராய ஊறல், ஆலத்தி கிராமத்தில் 12 பேரல்களில் இருந்த 1,200 லிட்டா் சாராய ஊறல், தாழ்கெண்டிகல் கிராமத்தில் 400 லிட்டா், மல்லிகைப்பாடி கிராமத்தில் 1,800 லிட்டா், நாராயணம்பட்டி கிராமத்தில் 1,000 லிட்டா், தேக்கம்பட்டு கிராமத்தில் 800 லிட்டா், சின்னதிருப்பதி கிராமத்தில் 400 லிட்டா் என மொத்தம் 7,600 லிட்டா் சாராய ஊறல்களை கண்டறிந்து அங்கேயே கீழே கொட்டி அழித்தனா் (படம்). இதில் தொடா்புடைய எதிரிகள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனராம். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com