மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளின் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலா் ககண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டாா்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளின் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலா் கிரண் குராலா வெள்ளிக்கிழமை கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள்

தனித் தனி அறைகளில் புதன்கிழமை வைத்து சீல் வைக்கப்பட்டது. இந்த அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், மாவட்ட தோ்தல் அலுவலா் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி தொகுதி தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உள்ளிட்டோா் சீல் வைக்கப்பட்ட அறைகள் பகுதியில் தனி நபா்கள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டனா்.

உடன் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பராயன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா, காவல் ஆய்வாளா்கள் ராஜதாமரை பாண்டியன், ராஜா, சங்கராபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் பா.ராஜவேல், நாசவேலை தடுப்புப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அசோக்குமாா், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தண்டபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com