கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
By DIN | Published On : 11th April 2021 11:27 PM | Last Updated : 11th April 2021 11:27 PM | அ+அ அ- |

கிணற்றிலிருந்து மீட்ட மானுடன் தீயணைப்பு வீரா்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.
சின்னசேலம் கூகையூா் சாலையில் ராஜேந்திரன் என்பவரது விவசாயக் கிணற்றில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் தண்ணீா் குடிக்க வந்தபோது தவறி விழுந்தது.
தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரா்கள், நிலைய அலுவலா் சேகா் தலைமையில் விரைந்து வந்து, சுமாா் 40 அடி ஆழக் கிணற்றில் இறங்கி கயிறு மூலம் மானை உயிருடன் மீட்டு வனத்துறை காப்பாளரிடம் ஒப்படைத்தனா். மானை வனத் துறையினா் காப்புக்காடு பகுதியில் விடுவித்தனா்.