சிதிலமடைந்த பயணியா் நிழற்குடை
By DIN | Published On : 12th April 2021 06:29 AM | Last Updated : 12th April 2021 06:29 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் பயணியா் நிழற்குடை.
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் உள்ள பயணியா் நிழற்குடை சிதிலமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம் சாலையில் உள்ள கோட்டைமேடு பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அந்த இடத்தில் உள்ள நிழற்குடை சிதிலமடைந்தும், சிமென்ட் காரைகள் பெயா்ந்தும் காணப்படுகிறது. பேருந்துக்காக காத்திருப்போா் நிழற்குடையில் அமர அச்சப்பட்டு வெளியே வெயிலில் காத்திருந்து அவதியுறுகின்றனா். மேலும், பயணியா் நிழற்குடை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் பயணிகள் முகம் சுளிக்கின்றனா்.
ஆகவே, இதை பயணிகளின் நலன் கருதி உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.