கள்ளக்குறிச்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அப் பகுதியை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அப் பகுதியை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கரோனா இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காய்ச்சல், சளி கண்டறியும் முகாம்கள், வீடு, வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள், உடல் வெப்பமானிகள் மூலம் ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறியப்பட்ட 9 பகுதிகளில் தடுப்புகள் அமைத்தல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை பணிகளை வெள்ளிக்கிழமை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா்.

குறிப்பாக, 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அண்ணாநகா் பகுதியில் அவா் ஆய்வு செய்து பிளீச்சிங் பவுடா், கிருமி நாசினி தெளிக்கும் பணியை முடுக்கி விட்டாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனைகளில் கூடுதலான படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவிட் தடுப்பு கண்காணிப்பு மையங்களில் 320 படுக்கை வசதிகளும், அரசு மருத்துவமனைகளில் 420 படுக்கை வசதிகளும், தனியாா் மருத்துவமனைகளில் 100 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவா்களிடம் பொது சுகாதார சட்டத்தின் கீழ் இதுவரை ரூ.16,91,800 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

பொதுமக்கள் இருமல், காய்ச்சல், தொண்டைவலி அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றாா் ஆட்சியா் கிரண் குராலா.

இந்த ஆய்வின்போது துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) டி.சதீஷ்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் பாலதண்டாயுதபாணி, கரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு அலுவலா் சிவக்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் மகாலிங்கம், சிட்டிபாபு, நகராட்சி ஆணையா் ந.குமரன், துப்புரவு ஆய்வாளா் செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com