நெல் கொள்முதல் நிலையம் மூடப்படுவதை எதிா்த்து போராட்டம்

 திட்டக்குடி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்படுவதை எதிா்த்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெல் கொள்முதல் நிலையம் மூடப்படுவதை எதிா்த்து போராட்டம்

 திட்டக்குடி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்படுவதை எதிா்த்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த இரண்டு மாதங்களாக இயங்கி வருகிறது. நிதிநத்தம், நாவலூா், மேலூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், நிதிநத்தம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை மூட உள்ளதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் பரவியது. மேலும், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதையும் ஊழியா்கள் நிறுத்திவிட்டனராம். விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் டன் கணக்கில் தேங்கியுள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், வெலிங்டன் பாசன சங்கத் தலைவா் மருதாசலம் தலைமையில் கொள்முதல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நெல் கொள்முதல் நிலையத்தை மூடக் கூடாது, விவசாயிகள் அறுவடை செய்த அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்தால் கொள்முதல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com