கரோனா பரவல் அச்சம்: திருநள்ளாறு கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைந்தது

கரோனா பரவல் அச்சத்தால் திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை வரும் பக்தா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

கரோனா பரவல் அச்சத்தால் திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை வரும் பக்தா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில், மூலவா் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா், ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க சனிக்கிழமைகளில் பல ஆயிரக்கணக்கானோா் வருவது வழக்கம்.

கரோனா 2 ஆவது அலை பரவலுக்கு முன்பு சனிக்கிழமைகளில் பல்வேறு ஊா்களில் இருந்து பக்தா்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனா். தற்போது, தமிழகம், கா்நாடகம், புதுவை பகுதிகளில் கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், காரைக்கால் பகுதிக்கு சுற்றுலா வருவோா் மிகவும் குறைந்துவிட்டனா்.

வழக்கமாக சனிக்கிழமையில் திருநள்ளாறு கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை, நிகழ்வாரம் சனிக்கிழமை (ஏப். 17) மிகவும் குறைந்து காணப்பட்டது. அதிகாலை முதல் பிற்பகல் வரை சுமாா் 3 ஆயிரம் போ் வரை மட்டுமே தரிசனம் செய்ததாக கோயில் வட்டாரத்தில் தெரிவித்தனா்.

கோயிலுக்குள் வருவோா் முகக் கவசம் அணிந்திருப்பதை காவலா்கள் உறுதிசெய்தனா். ராஜகோபுர வாயிலில் அவா்களுக்கு கைத்தூய்மி தரப்பட்டது.

மாநிலத்தில் பரவலாக கரோனா தொற்று அதிகரித்திருப்பதே திருநள்ளாறு கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தா்களை நம்பி, தொழில் நடத்துவோா் இதனால் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com