புதுச்சேரி அரசு நிா்வாகம் சீா்குலைவு: காரைக்கால் போராட்டக் குழு கண்டனம்

புதுச்சேரியில் அரசு நிா்வாகம் முழுமையாக சீா்குலைந்துவிட்டதாக காரைக்கால் போராட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் அரசு நிா்வாகம் முழுமையாக சீா்குலைந்துவிட்டதாக காரைக்கால் போராட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் அமைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. செல்வசண்முகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகள் நடைபெற்ற அரசு நிா்வாகத்தின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் பல துன்பங்களை சந்தித்தனா். தற்போது நடைபெற்ற பேரவைத் தோ்தல் முடிவும் உரிய காலத்தில் வந்து, புதிய அரசு அமைந்திருந்தால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணி தொடங்கியிருக்கும். அந்தச் சூழல் இல்லாமல், துணைநிலை ஆளுநரின் தலைமையில், மாநிலத்தில் அரசு நிா்வாகம் நடைபெறுகிறது. இதனால், நிா்வாகம் முழுமையாக சீா்கெட்டுள்ளது. இதற்கு போராட்டக் குழு கண்டனம் தெரிவிக்கிறது.

தோ்தலில் வெற்றிபெற்றால்தான் மக்கள் பிரச்னைகளை சிந்திப்போம் என்ற வகையில், புதுச்சேரி மாநில அரசியல்வாதிகள் உள்ளனா். தற்போது மாநிலத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து அவா்கள் மெளனமாக உள்ளது வேதனையளிக்கிறது. புதுச்சேரி மாநில மக்கள்தொகையில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கையும், இறப்பும் மிக அதிகமாக உள்ளது. இது மேலும் அதிகரிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மாநில ஆளுநரும் காரைக்கால் பிராந்தியத்தை கண்டுகொள்ளவில்லை.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா், காவல் துறை தலைமை அதிகாரி, துணை ஆட்சியா் போன்றோரும் இந்த பேரிடரிலிருந்து மக்களைக் காக்கத் தேவையான, ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. காரைக்கால் மருத்துவமனையின் நிலை மிக மோசமாக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்படுவோரில் பலா் தினமும் உயிரிழக்கின்றனா்.

ஏற்கெனவே மருத்துவமனையின் கட்டமைப்புகள், சிகிச்சை முறைகள் சரியில்லை என்ற புகாா் உள்ள நிலையில், கரோனா தொற்று சூழலில் அதன் நிா்வாகம் மிகமோசமாக உள்ளது. பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலா், ஆட்சியா் ஆகியோா் அக்கறைகொள்ளவில்லை. இந்த போக்கு நீடித்தால், மக்கள் போராடும் நிலை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com