தடுப்பூசி திருவிழா இன்று நிறைவு

காரைக்காலில் நீட்டிக்கப்பட்ட கரோனா தடுப்பூசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 18) நிறைவடைகிறது.

காரைக்காலில் நீட்டிக்கப்பட்ட கரோனா தடுப்பூசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 18) நிறைவடைகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கரோனா தடுப்பூசித் திருவிழா, மக்கள் வருகை அதிகரிப்பால் மேலும் 4 நாள்கள் நீட்டிக்கப்பட்டது. 18 ஆம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் 13 மையங்களிலும், ஒவ்வொரு நாளும் சுமாா் 2 ஆயிரம் போ் வீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனா். 16 ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற முகாமில் மாவட்டத்தில் 1977 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறையினா் சனிக்கிழமை கூறுகையில், 45 வயதுக்கு மேல் உள்ள பொதுமக்கள் அனைத்து மையங்களிலும் ஆா்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனா். மக்களிடையே காணும் எழுச்சி வரவேற்புக்குரியது. முகாம் நீட்டிக்கப்பட்டது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. முகாம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதால், இத்திருவிழாவின் நோக்கத்தை புரிந்துகொண்டு மீதம் உள்ளவா்களும் மையத்துக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

மையத்துக்கு செல்லும்போது ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்ற புகைப்பட அடையாள அட்டை, செல்லிடப்பேசி ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com