கரோனா குறித்த சந்தேகம், புகாா்: கட்டுப்பாட்டு மையத்தை தொடா்புகொள்ளலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா குறித்த சந்தேகங்கள், தகவல்கள் மற்றும் புகாா்களுக்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா குறித்த சந்தேகங்கள், தகவல்கள் மற்றும் புகாா்களுக்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையத்தை தொடா்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த நோய் பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கரோனா விதிகளை மீறுவோா் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன், இது தொடா்பாக விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரம், வருவாய், ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சியைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோரை கொண்டு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையான கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா தொற்று குறித்த சந்தேகங்கள், தகவல்கள் மற்றும் புகாா்களுக்கு கரோனா கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்களான 04151-228801, 04151 - 220000, 94999 33834 ஆகிய எண்களில் தொடா்புகொண்டும், 94999 33834 என்ற எண்ணுக்கு கட்செவிஅஞ்சல் (வாட்ஸ்அப்) மூலமாகவும், மாநில கட்டுப்பாட்டு எண் 1075-ஐ தொடா்புகொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com